Thursday, 7 January 2010

2 States வாசிப்பு அனுபவம்




'மாப்பிள்ளை திமிர்' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. திருமணமான பெண்களுக்கு மட்டும் புரிந்த வார்த்தை.

"Afterall, your family is like mine you see" என்ற ஒரு சுகர் கோட்டிங்கோடு, கணவர்கள் நம்ம குடும்பத்தை நக்கல் பண்ணி தள்ளுவது. "உங்க குடும்பத்துல யாரும் பேசாம டிவி பாக்க மாட்டாங்களா?", "உங்க அம்மா நல்லா சமைப்பாங்கன்னு சொன்னியே, ஒரு வேளை இன்னைக்கு உடம்பு கிடம்பு சுகமில்லையா? ", "உன் தம்பிக்கு முன்னாடி இதே மாதிரி சட்டைய கரகாட்டக்காரன் படத்துல பாத்தேன்" போன்ற இத்தியாதிகள்.35 வயதாகும் சேதன் பகத்துக்கு உடம்பு முழுக்க மாப்பிள்ளை திமிர்.தமிழ் நாட்டுல பெண் எடுத்துட்ட கவச குண்டலம். "You only make fun of people you care for, otherwise I dont have anything against you, dear south indians" ன்னு ஒரு டிஸ்க்ளைமர்.நம்மவர்களை போட்டு சாத்து சாத்துன்னு சாத்திருக்கார். புத்தகம் முழுக்க.

சாம்பாரில் இருந்து ஆரம்பித்து, நம்ம நிறம், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பது, பட்டுப்புடவை, நகைகள் என்று ஒன்றை விட வில்லை. பஞ்சாபிக்காரர்களையும் ஒரு கை பார்க்கிறார். இருந்தாலும் நம்ம வீட்டுக்காரரை நம்ம சாத்துறதுக்கும், பக்கத்து வீட்டுக்காரம்மா அதையே செய்றதுக்கும் தான் எத்தனை வித்தியாசம்? அதனால புத்தகம் படிக்கும் போது நமக்கு பொங்குகிறது. ஒரு வேளை சேதன் காதலித்த பெண் தெலுங்கு பெண்ணாய் இருந்து, அவர் கோங்குரா சட்னியை நக்க'லு' பண்ணி இருந்தார்ன்னா, நமக்கு ரசித்து இருக்குமோ என்னவோ?

"This book is dedicated, (for the first time in the history of books), To my inlaws.That does not mean I am henpecked or not man enough"
இப்படி வரலாற்று சிறப்புடன் ஆரம்பிக்கும் புத்தகத்தின் கதை இது தான்:
பஞ்சாபி பையனுக்கும், தமிழ் பொண்ணுக்கும் காதல். பெற்றோர் எதிர்க்கிறார்கள். DDLJ ஷாருக், பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யா, ஜோடி பிரசாந்த் வரிசையில், 2 ஸ்டேட்ஸ் க்ரிஷ் மல்ஹோத்ரா. ஒரே ஒரு வித்தியாசம். இந்த படங்களில் எல்லாம்,"நம்ம பெண்ணை ஆட்டைய போட தான் வந்துருக்கான்" என்ற உண்மை பெண் குடும்பத்தாருக்கு கிளைமாக்சில் தான் தெரிய வரும்.சென்னைக்கு வரும் க்ரிஷ், பெண் வீட்டாரை வழிக்கு கொண்டு வருகிறார். நாயகி டெல்லிக்கு சென்று க்ரிஷ்ஷின் குடும்பத்தை இம்ப்ரெஸ் செய்து விடுகிறார். ஆனாலும், ரெண்டு குடும்பமும் ஒன்றை ஒன்று முறைத்து கொள்ள, காதலர்கள் பிரிகிற நிலைமை. 'Something Something' happens and முடிவு சுபம்.

இந்த டப்பா கதையில் அப்படி என்னதான் இருக்கிறது? என்றால், உண்மையில் ஒன்றும் இல்லை. பின்ன புத்தகம் சக்கை போடு போடுகிறது."Chetan Bhagat has made India read like never before" என்று கொண்டாடுகிறார்கள்.

காரணம்: எளிமை. இலக்கியப்பதிவுகளை விட, உப்புமா பதிவுகளுக்கு எக்கச்சக்க ஹிட்ஸ் கிடைக்கிற அதே strategy.Dan Brown, Paulo Coelho க்களை நாட்கணக்கில், வாரக்கணக்கில் வைத்து கொண்டு திண்டாடுபவர்களுக்கு கூட வெறும் இரண்டு மணி நேரம் போதும். முழு புத்தகத்தையும் படித்து முடிக்க. அதுவும் ஒரு கையால் சப்பாத்தி சுட்டுக்கொண்டு, அது வேகும் நேரத்தில், அதே கையால் சப்ஜியை கிளறிக்கொண்டே இன்னொரு கையால் 2 ஸ்டேட்சை பிடித்துக்கொண்டு கூட படிக்கலாம். ஒரு வார்த்தைக்கு கூட அகராதி வேண்டாம். ஆனால் ஒரு ஆங்கிலப்புத்தகம் வாசிக்கும் உணர்வை தராதது குறையா நிறையா என்பது வாசிப்பவரை பொருத்தது. ஒரு ஜனரஞ்சகமான தமிழ் நாவல் வாசிக்கும் அனுபவம் தான் எனக்கு இருந்தது.

Heroine அனன்யா. ஆச்சாரமான தமிழ் குடும்பம். ரொம்ப தைர்யமான, அறிவான, வெகு அழகான பெண்ணாக காட்ட படுகிறார். ஆனால் செய்வதெல்லாம் செம அராத்து வேலைகள். தந்தூரி சிக்கனை வெளுத்து கட்டுகிறது. தன் பாய் ப்ரெண்டு ரூமில் அதும் IIMA கேம்பசுக்குள் ரெண்டு வருடம் சேர்ந்து தங்குகிறது(பல் விளக்கி, குளிக்க தன் ரூமுக்கு போய்டும்). ரத்னா ஸ்டோர்சில் வைத்து தன் காதலனுக்கு கிஸ் கொடுக்கிறது. அதும் அடுத்தவர் பார்க்கிற மாதிரியா குடுப்பாங்க அசடு?பீர்,வோட்கா என்று அடித்து ஆடுகிறது. படிக்கறப்போ நமக்கு கேராக இருக்கிறது. அதும் இதெல்லாம் நடப்பது பத்து வருஷத்துக்கு முந்தியாம். ஆரம்பித்தில் சொல்கிறார் சேதன். "இது என் சொந்தக்கதை. ஆனாலும் நிறைய fiction இருக்கிறது"
கடவுளே, இதெல்லாம் fiction ஆகவே இருக்கட்டும்.

பம்மல் கே சம்பந்தம் படத்தை பல தடவை பார்த்தாலும் பார்க்கிறப்போ எல்லாம் சிரிக்கலாம். ஆனால் காதலா காதலா படத்தை முதல் தடவை பார்க்கிறப்போ மட்டும் தான் சிரிப்பு வரும். இந்த புத்தகத்தில் இருக்கும் நகைச்சுவை இரண்டாம் வகையை சேர்ந்தது.
Yet, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் சில இடங்களில்.
அனன்யா தன்னை பெண்பார்க்க வந்தவன் "எனனை virgin னா" ன்னு கேட்டான் என்று க்ரிஷ்ஷிடம் சொல்கிறாள்.
"he asked if I am pure?"
அதற்கு க்ரிஷ்,"Does he want Ghee or what?".

"தென்னிந்திய பெண்கள், அதும் தமிழ் பெண்கள், வடக்கத்தி ஆண்களை விரும்புவார்கள். அவர்களை கவிழ்த்து விட என்ன வேணும்னாலும் செய்வாங்க" க்ரிஷ்ஷின் அம்மா சொல்கிறார். அதற்கு காரணம் அங்க ஆண்கள் ரொம்ப செவப்பாம்.உதாரணத்துக்கு ஹேமமாலினி, ஸ்ரீதேவி. அட பாவிகளா? எங்க ஊருலேர்ந்து "stunning beauties" ரெண்டு பேரை தட்டிட்டு போனதோட, இப்டி வேற எண்ணம் இருக்கா உங்களுக்கு? Superiority complex at its maximum.

கல்லூரி மாணவர்களிடம் சகஜமாக புரளும் அனைத்து unparliamentary வார்த்தைகளையும் அள்ளி தெளித்து இருக்கிறார்.ஆங்கிலத்தில் மட்டுமில்லை. அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழிலும். தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணி, எது தெரிஞ்சிகிட்டாரோ இல்லையோ, இதெல்லாம் ரொம்ப நல்லா கத்துட்டு இருக்கார்.

தமிழர்களின் சங்கீத ஆர்வம், கல்வி மீது உள்ள மோகம் என்று சில விஷயங்கள் நல்லதாகவும் சொல்கிறார். உற்று கவனித்தால் அதிலும் நக்கல் ஸ்மைலிகள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. "when it comes to music,Tamilians could kill", "They just have good brains".

"உங்க அம்மா சமையல் generally ரொம்ப சுமார் தான்னாலும், உருளை கிழங்கு பொரியல் அவங்கள மாதிரி பண்ண எங்கம்மாவால கூட முடியாது" ரக, diluted மாப்பிள்ளை திமிர்.

பஞ்சாபி மக்களின் வரதட்சணை சிஸ்டம், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கல்யாண வீட்டில் செய்யும் அலப்பரைகள், "உணவே பிரதானம்" என்ற அவர்களுடைய கொள்கை, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தர் மீது ஒருத்தர் வைக்கும் அன்பு என்று நமக்கு பஞ்சாபிக்களை பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது இந்த புத்தகத்தில்.பஞ்சாபி பையன்களை ரூட் விட்டுக்கொண்டு இருக்கும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் :-) படித்த பிறகு 'இந்த பையன் அவசியம் தானா' என்று தோன்றி விடும் ரிஸ்க் இருக்கிறது.

IIM, IIT, Citibank, HLL, இந்த நிறுவனங்களை பற்றிய நையாண்டிகள் நிறைய. ஆனால், "பச்ச், இதையெல்லாம் எங்க தமிழ் பதிவர்களை எழுத சொல்லி பாருங்கள், பிரிச்சு மேஞ்சுருப்பாங்க" என்று சொல்லவைக்கும் அளவு தான்.Sarcasm not at its best.

"ரெண்டு மாநிலங்களுக்கிடையே இருக்கும் பிராந்திய பேதங்கள், தண்ணீர் பிரச்சனை, கரண்ட் பிரச்சினை, எல்லை பிரச்சினை போன்றவைகளோடு நிற்பதில்லை.சிலருக்கு வாழ்க்கையையே புரட்டி போடுகிறது, அதனால எல்லாரும் "நான் இந்தியன்" என்று நினையுங்கள்" என்று சொல்ல முயன்று இருக்கிறார். அட போங்க சேதன், நாங்க இருக்கிற மாநிலங்களையே இன்னும் எத்தனையா பிரிக்கலாம்ன்னு பார்த்துட்டு இருக்கோம்! எங்க கிட்ட போய்?

My verdict: Expectations partially met.

இட்லிவடையில் வெளியானது.
 இட்லிவடைக்கு நன்றி.

6 comments:

  1. // படித்த பிறகு 'இந்த பையன் அவசியம் தானா' என்று தோன்றி விடும் ரிஸ்க் இருக்கிறது.//

    :)

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல விமர்சனம்ங்க. ரெண்டு பக்கத்தையும் குறை வைக்காம கேலி பண்ணியிருக்கார். ரொம்ப மண்டைன்னு நினைப்பு போல. எனக்கென்னவோ எல்லாரும் கொண்டாடுற அளவுக்கு அவர் வொர்த் இல்லைன்னு தோணுது.

    ReplyDelete
  3. அன்பின் ப்ரியா,

    ரொம்ப நல்ல நுண்ணிய விமர்சனம்.... நிறைய கவனித்து விமர்சித்து இருக்கீறீர்கள்... நானும் இந்த புத்தகம் படித்தேன்... ரொம்ப ஆழமா பார்க்காமல் மேலோட்டமாக படித்தது ஒரு ஜாலியான வாசிப்பு உணர்வை மட்டுமே தந்தது...

    டிஸ்கி : இதிலே தமிழர்களைக் கேவலப்படுத்துவதாய் அமைந்த விஷயங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பை முன்னிட்டு சேட்டன் சென்னையிலேயே ஒரு வாசகர் சந்திப்பு மற்றும் புத்தக அறிமுக விழா வைத்து தமிழர்களை குளிர்விக்க முயற்சித்துள்ளார்...

    ReplyDelete
  4. Jeeva Subramaniam7 January 2010 at 06:36

    Arumaya vimarsanam panni irukkinga...Kalakkunga...
    Innum Padikkalai...
    Inime than aarambikkanum...
    Yenakku ithu padathukku munnala vara trailer mathiri irunthathu...

    ReplyDelete
  5. The first book I read by Chetan was "Five Point Someone". Since that was an underdog story, I was actually able to relate to myself and I liked it. The next one was "The 3 Mistakes of my Life". That was a totally unimpressive. Looking at this review, I think I would safely ignore this one too. Thanks for the tip Priya.

    ReplyDelete
  6. அழகான விமர்சனம், புத்தகத்தை படிக்கமாலையே புரிந்து கொள்ள முடிகிறது
    Radhakrishnan R
    http://systechrk.blogspot.com

    ReplyDelete