Sunday 8 February 2009

அஹம் ப்ரம்மாஸ்மி



இது ப்ரியாவுக்கான படம் அல்ல.எனக்கு 'கண்ட நாள் முதல்' மாதிரி காமெடி வேண்டும், 'அலைபாயுதே' மாதிரி romance வேண்டும். 'Dil Chahta hai' மாதிரி emotions வேண்டும்.'பாமா விஜயம்', 'எதிர் நீச்சல்' ,மாதிரி ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் சுவாரஸ்யம் வேண்டும். 'அழகன்','பார்த்தாலே பரவசம்' மாதிரி 'திரைக்கதை மாயாஜாலம்' வேண்டும். 'முந்தானை முடிச்சு', ஆராரோ ஆரிரரோ' மாதிரி முடிச்சுகள் போட்டு, அவைகளை அவிழ்த்திருக்க வேண்டும். 'ஆனந்தம்', 'ஆஹா' மாதிரி படம் முழுக்க நல்லவர்களாக இருக்க வேண்டும். அந்நியன்,'கில்லி' மாதிரி விறுவிறுப்பு இருக்க வேண்டும். எதுவுமே இல்லை என்றாலும் படத்தில் ரஜினி,கமல்,சிம்ரன் மாதிரி எனக்கு பிடித்த யாராவது படத்தில் இருந்தால் கூட போதும். ஒரே வரியில்,'படத்தில் யாருக்கும் ரத்தம் வர கூடாது'. அதனால் இது எனக்கான படம் இல்லை.

ஆனாலும் என்னில் இருந்து விலகி நின்று இந்த படத்தை பற்றின சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இது படத்தின் விமர்சனம் அல்ல. 'Bala ஒரு உலகத்தர இயக்குனர்', இளையராஜா ஒரு இசை மாமேதை' என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக எழுதுவதில் எனக்கு உடன் பாடில்லை. மேலும் இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் என்ன நினைத்து அமைத்து இருப்பார் என்று நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா என்றே நான் இன்னும் யோசித்து கொண்டு இருப்பதால், அதை எழுத்தில் கொண்டு வருவது எனக்கு சுலபம் இல்லை.






நான் கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஒருவன் உலகத்தில் வாழக்கூடாதவர்களுக்கு தண்டனையாக மரணத்தையும், வாழ முடியாதவர்களுக்கு அதே மரணத்தை வரமாகவும் அளிக்கிறான். இது தான் இந்த படத்தின் one liner.

Sify யின் 'Outstanding' rating க்கு ஒரு சகோதரர் இப்படி பதில் எழுதி இருந்தார். 'Bala is psychic'.
அவரிடம் ஒரே ஒரு கேள்வி. காசியில் எரியும் பிணங்களை ஆசீர்வதிக்கும் ஒரு அஹோராவையும், தென் தமிழ் நாட்டின் மலைக்கோட்டை கிராமத்தில் இருக்கும் ஊனமுற்ற பிச்சைக்காரர்களையும் பற்றின உண்மைகளை நம்மிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியில் நீங்கள் வேறு என்ன எதிர் பார்க்கிறீர்கள்? Andhra restaurant க்கு போய், 'ஒரு ஹைதராபாத் பிரியாணி - extra spice' என்று ஆர்டர் பண்ணி சாப்பிட்டு விட்டு 'இது சரவண பவன் meals மாதிரி இல்லை' என்று complain பண்ணினால் தவறு யார் மீது சொல்லுங்கள்?'என் படம் இப்படி கனமாக தான் இருக்கும். பார்ப்பவர்களின் ஈரல்குலை நடுங்க தான் செய்யும் ' என்று ஏற்கனவே மூன்று முறை தெளிவாக சொல்லி விட்டார் அவர்.பிரியாணியில் சாம்பார் சுவை எதிர் பார்ப்பவனை பார்த்தால் நீங்கள் என்ன நினைப்பீர்களோ, அதே உணர்வு தான் பாலாவை psychic என்று சொல்லும் உங்களை பார்த்து எனக்கு வருகிறது.நந்தாவிலும்,சேதுவிலும் பிதாமகனிலும் 'பாசம்', 'நட்பு', 'காதல்' என்று சிலதை கலந்தவர், இப்படி முழுக்க முழுக்க வியாபார விஷயங்களே இல்லாமல் படம் எடுத்து இருக்கிறார் என்றால், அது அவருடைய தன்னம்பிக்கை.
ஷங்கருக்கு ஒரு அம்பியையும், மணிரத்னத்துக்கு ஒரு மைக்கேலையும் காண்பித்து கொடுத்தவர் பாலா.தயவு செய்து அவரை திட்டாதீர்கள்.'Not my kind' என்று decentஆக விலகிக்கொள்ள மட்டுமே நமக்கு உரிமை இருக்கிறது.

வசனம் ஜெயமோகன். பல மூத்த பதிவர்கள் 'பின்நவீனத்துவம்' என்று எனக்கு புரியாத ஒரு மொழியில் இவரை வாழ்த்துவதையும், வசைபாடுவதையும் படித்து இருக்கிறேன். வசனம் எனக்கு ரொம்ப பிடித்தது. நிறைய இடங்களில் சிரித்தேன்,பல இடங்களில் 'அட' என்று கை தட்டினேன்.நிறைய வார்த்தைகள் 'பீப்' ஆக மட்டுமே கேட்கிறது. சென்சார்?
ஒரு வேளை அது தான் பின்நவீனத்துவமா???

எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். பாவம் இவருக்கு வேலை அதிகம் இருந்து இருக்கும்.ஷூட்டிங் முடிந்த சமயத்தில் பாலா நாலரை மணி நேரத்துக்கு படம் எடுத்து இருக்கிறார் என்று படித்த ஞாபகம். ரெண்டே கால் மணிநேரமாக குறைத்து இருக்கிறார். அந்த ஜெயில் குத்தாட்டத்தை வெட்டி இருக்கலாம், பாலா ரசிகனுக்கு அதெல்லாம் தேவை இல்லை.

ஆர்யாவின் உயரமும், உடல் மொழியும், ருத்ரன் கதா பாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகின்றன. ஆனால் குரலில் ஒரு கம்பீரம் இல்லை. ஒரு வேளை, கஞ்சா அடிக்கும் குரல் இப்படி தான் இருக்கும் என்று பாலா நினைத்து இருப்பாரோ என்னவோ? இந்த வருடத்தின் தேசிய விருதுகளில் ஆர்யா, பூஜா இருவரும் இடம் பெறுவார்கள் என்றே நினைக்கிறேன்.

படத்தின் எந்த காட்சிகளில் எல்லாம் பார்ப்பவர்கள் பதற வேண்டும் என்று இயக்குனர் நினைத்தாரோ, அந்த வேலையை பின்னணி இசை சரியாக செய்கிறது. பாடல்களை நான் இன்னும் சரியாக கேட்க வில்லை.

யாரோ இந்த படத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும் Sify யில் கமெண்ட் போட்டு இருந்தார்கள். அதை வன்மையாக மறுக்கிறேன். 'வாழ்க்கையில் தான் எந்த முதலாளியின் கீழே பிச்சை எடுக்கும் வேலையை செய்ய வேண்டும் என்ற choice கூட இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்' என்ற பாடத்தை take-home ஆக கொடுத்து விட்டு இருக்கிறார் Bala. உதாரணத்துக்கு ஒரு வசனம், 'இவ பிச்சை எடுக்க மாட்டேன்னு முரண்டு பண்ணியதால் முதலாளி கல்லை எடுத்து இவ இடுப்பில் ஓங்கி அடிச்சு இவளை நடக்க விடாம பண்ணிட்டாரு, இதுக்கு தான் பொறக்கும் போதே என்னைய மாறி ஊனமா பொறக்கணும், அந்த விதத்துல நான் ராசிக்காரன்'.
இந்த படத்தை பார்க்கும் பெண்களுக்கு, புருஷன் பிரச்சினை, மாமியார் பிரச்சினை, அலுவலக பிரச்சினை எல்லாம் ரொம்ப silly ஆக தோன்ற ஆரம்பித்து விடும். என்ன, சில காட்சிகளில் மட்டும் கண்ணை மூடி கொள்ள வேண்டும். அல்லது துடைத்து கொள்ள வேண்டும்.

On the lighter side,
பாலா உங்களுக்கு குரல்வளை என்றால் என் இவ்வளவு பிடிக்கிறது?

பின்குறிப்பு: வழக்கமாக செய்யும் எந்த நகைச்சுவை முயற்சியும், இந்த பதிவின் seriousness ஐக் குறைத்து விடக்கூடாது என்பதால் ரொம்ப conscious ஆக எழுதி இருக்கிறேன். உரைநடையில் எழுத முயற்சித்ததற்கும் அதுவே காரணம். அதனால் சில சுவாரஸ்யமான விஷயங்கள் விட்டு போயின. அதை பின்னொரு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment