கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் இன்று மாரடைப்பால் காலமானார்.
சற்று முன் என்னுடன் வேலை செய்கிற ஒரு பெண்ணும் நானும், அவளுடைய ஆக்டிவாவில் வெளியில் சென்று வந்தோம்.
ஒரு மெயின் ரோட்டில் ரெண்டு பைக்கில் கர்நாடக கொடியுடன் இருவர் ஏதோ கன்னடத்தில் சத்தமாக சொல்லிக்கொண்டே போக, பின்னால் ஒரு திறந்த வேனில், விஷ்ணுவர்த்தன் புகைப்படத்துக்கு மாலை சாற்றப்பட்டு பைக்கை தொடர்ந்து கொண்டு இருந்தது. அந்த தெருவின் கடைகாரர்கள் "பட பட" என்று ஷட்டர்களை இழுத்து விட்டார்கள். எங்களுக்கும் ஏதோ புரிந்தது. சட்டென்று வண்டியை திருப்பி ஆபீஸ் வந்துட்டோம்.
வந்து நேரா லஞ்ச் போனோம். விடுமுறை நாட்கள் என்பதால் வழக்கமான லஞ்ச் மேட்கள் leave. இருக்கிறவங்க எல்லாம் ஒண்ணா சேந்து தான் போய்கிட்டு இருக்கோம். ரெண்டு வடக்கு, ரெண்டு ஆந்திரா, ஒரு தமிழ்-இது நான் , ஒரு கன்னடா, ஒரு மலையாளி என்று ஒரு பாரத விலாசாக இருந்த லஞ்ச் டேபிள்.
நாங்கள் நடந்ததை சொல்லவும், ராஜ்குமார் மறைவின் போது, பெங்களூரில் நடந்த நிகழ்வுகளை நினைவில் கொணர்ந்து, பேச்சு எங்கெங்கோ சென்றது.ஒரு வடக்கர் தான் ஆரம்பித்தார்.
"இதென்ன ஒரு நடிகர், இயற்கையாக இறந்ததற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா?"
ஒரு தெலுங்கரை பார்த்து, "உங்க ஊரிலும் தான் ......ரை, கடவுளாக நினைக்கிறார்கள்".
தெலுங்கர் பதிலுக்கு, " ஏன், உங்க ஊர்ல இல்லையா? ..............னுக்கு உடம்பு முடியாமல் இருந்தப்போ பூஜை எல்லாம் பண்ணீங்க?"
அடுத்த வடக்கர்.
அவருக்கு டார்கெட் நான்.
"உங்க ஊருல ................... துக்கு, ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, இப்டி தான் கலவரம் பண்வீங்களா?"
"ஒரு மனுஷ உயிர் ஜோக் பண்ற விஷயம் இல்லை" இது என்னை அடுத்து அமர்ந்து இருந்த மலையாளி. கொஞ்சம் சீரியஸ் ஆயிட்டார்.
இப்படி நடிகர்களில் ஆரம்பித்த பேச்சு, அப்படியே தெலுங்கானா, காவேரியை எல்லாம் தொட்டு, நம்ம திருவள்ளுவரில் வந்து நின்றது.
" சமீபத்துல கூட ஒரு சிலை திறந்தாங்களே...எத்தனை பாதுகாப்பு எத்தனை போலீசு, ஆமா யார் அவர்?"
"யாரோ முனிவராம்" (some saint itseems)
கேட்டவர் தெலுங்கர். பதில் சொன்னவர் கன்னடர்.
இதுக்கு மேல என்னால முடியலை.
"முனிவரா? அவர் யார் தெரியுமா?" ன்னு ஆரம்பிச்சு மூச்சு வாங்க சொல்லி முடிச்சப்போ,
"ச்ச ச்ச 1330 இல்ல, நூத்து பதினஞ்சோ என்னவோ" (hey not 1330 man , some 115 )
(அட பாவி..எனக்கேவா?)....."இல்ல 1330 தான்" லேசாக அழுகை வந்தது.
"சமீபத்துல நான் கன்னியாகுமரி டூர் போனேன். அங்க கூட அவரோட சிலை கட்டி இருக்காங்க, அதன் உயரம், அடிக்கணக்கில் வந்து அவர் எழுதின பாட்டுகளோட எண்ணிக்கை ன்னு தான் சொன்னாங்க..I am sure its not 1330 feet tall"
"Oh thats 133 feet tall. The 1330 couplets are arranged as 133 parts with 10 couplets each"
"Oh ok"
பதிவின் தலைப்பை ஒரு தரம் படிக்கவும்.
Wednesday, 30 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
அட இது கூட தேறியாத சின்ன பொண்ணா இருந்தா எப்படி பிரியா!!
ReplyDeleteஉலக பொது மறை ன்னா- உலகம் பொதுவா மறைத்த , மறந்த அப்படீன்னு அர்த்தம்!
எனக்கு ஏதாவது மறை கழண்டு போனதா ன்னு கேட்க வேண்டாம்!!!!
hmm
ReplyDeleteஅப்படியும் வச்சிக்கலாம்..
ReplyDeleteநம்மவர்கள், அமெரிக்காவுல ஏதாவது சிலை வைச்சா, தேடிப் போய் தெரிஞ்சுப்பாங்க! உள்ளுர்ல என்ன நடக்கதுன்னு யாருக்கும் தெரியாது.
ReplyDelete"நம்பு தம்பி, நம்மால் முடியும்"ன்னு நம்ம உதயமூர்த்தி சொன்னத("உன்னால் முடியும் தம்பி" படம் வந்தே 20 வருடம் இருக்கும்), ஒபாமா உட்டாலக்கடி பண்ணித, வட இந்திய ஊடங்கள் பெருமையா(??) ஒளிபரப்பின. எல்லாம் மேலை நாட்டு மோகம்!
என்னோட கவலை எல்லாம், அடுத்த காவேரி பிரச்சனையில, அய்யன் சிலைக்கு என்னாகுமோ, அதை வச்சு இன்னும் என்னால்லாம் அரசியல் பண்ண போறாங்களோ?
நமக்கென்ன இன்னும் எத்தனை ஆயிரம் வேணுமானாலும் சொல்வோம். அதுக்காக....... நம்முடைய உலகம் இங்கே தமிழ்நாடு. அங்கேயே இது எல்லோருக்கும் தெரியுதான்னு பார்த்தீங்கன்னா.....
ReplyDeleteசரி விடுங்க. இதுக்குப்போய் பேஜாராவலாமா?
http://valaipoonga.blogspot.com/2009/12/blog-post.html
ReplyDeleteஉலகத்தில் உள்ள அனைவருக்கு தேவையான அறம் சார்ந்த கருத்துக்களை கொண்ட நூல் என்பதால் உலகபொதுமறை என்று நாம் சொல்கிறோம். அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லையே.
ReplyDeleteஅனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியவரை மட்டும் தான் நாம் சொல்லவேண்டுமென்றால் இலியானா, அசின், த்ரிஷா, விஜய், அஜித் போன்றவர்களின் கருத்தை மட்டும் தான் சொல்லமுடியும் :)-
நல்லவேளையாக உங்கள் அலுவலகத்திற்கு திரும்பி வந்தீர்கள். நான் ராஜ்குமார் கடத்தலின்போது நண்பருடன் மாட்டிக்கொண்டு கன்னடம் பேசத்தெரியாமல் ஒரு சில நிமிடங்கள் திண்டாடினேன்.
உண்மையில் வடக்கிலோ/மேற்கிலோ நடிகரை இந்தளவு கொண்டாடுகிறார்களா ? இல்லை நாம்தான் ஒரு defensive attitude காரணமாக அவர்களையும் அப்படி சித்தரிக்க முயற்சி செய்கிறோமா ?
//அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியவரை மட்டும் தான் நாம் சொல்லவேண்டுமென்றால் இலியானா, அசின், த்ரிஷா, விஜய், அஜித் போன்றவர்களின் கருத்தை மட்டும் தான் சொல்லமுடியும் :)-//
ReplyDeleteஇலியானா, அசின், த்ரிஷா ok (Hindhi padam ellam nadikirathunalla illanalum google search la ivangalukku hits athigam)
அஜித் -Koncham ok (Samrat ashoka hindi padathula nadichathala)
Intha listla விஜய் ethukkuna...
Avaru Rahul gandhi kooda pesiya matter koda paper la potti seithithan....
தமிழை செம்மொழியா அறிவித்தபின் இந்த சிக்கல் எல்லாம் தீர்ந்துவிடும்! :))))
ReplyDeleteகுசும்பன்,
ReplyDeleteவருகைக்கு நன்றி.
அதை விட பதிவு உங்களுக்கு புரிந்ததில் பெரு மகிழ்ச்சி.
//எங்களுக்கும் ஏதோ புரிந்தது. சட்டென்று வண்டியை திருப்பி ஆபீஸ் வந்துட்டோம். //
ReplyDeleteஅய்யோ பாவம்.. முனியாண்டிவிலாஸ் அன்னைக்கு மிஸ் பண்ணிட்டிங்களா?
//வழக்கமான லஞ்ச் மேட்கள் //
நாராயணா..இந்த கொசுத் தொல்லை..
//ஒரு தமிழ்-இது நான்//
தனக்குத் தானே பட்டம் கொடுக்கும் தானை தமிழச்சி வாழ்க.. ( திமுக ஆள்னு எப்டி எல்லாம் சொல்லிக்கிறாங்க)
//இல்ல 1330 தான்" லேசாக அழுகை வந்தது.//
அய்யோடா.. திருவள்ளுவர் பேத்தி..
//பதிவின் தலைப்பை ஒரு தரம் படிக்கவும்.//
நீங்க தமிழச்சின்னு சொல்லிக்கிறதில்லயா? அது மாதிரி தான்.. அதும் ஒலக பொது மறை.. மேட்டர் என்னன்னா, தமிழ்நாட்ல இருக்கிறவங்கள்ல 90% பேருக்கு 25 குறள்க்கு மேல தெரியாது.. :)
// Rajalakshmi Pakkirisamy said...
ReplyDeletehmm//
இதென்ன.. எதும் வேண்டுதலா? கோயில்மாடு மாதிரி தலைய ஆட்ற பழக்கம் இன்னும் போகவே இல்லையா?
துளசி மேடம்,
ReplyDeleteபேஜார் எல்லாம் ஆகலைங்க," உண்மைய சொன்னேன்" (மாணிக் பாஷா மாறி படிங்க).
பிள்ளையாண்டான்,
கவலைய விடுங்க. அதுக்கு தான் ஐடியா பண்ணி அங்க ஒருத்தரை நிறுத்தி, சாரி, உக்காத்தி வெச்சு இருக்காங்கல்ல...
மணிகண்டன்,
மேற்கு பத்தி தெரியலை, ஆனா வடக்குல ஒருத்தருக்கு அந்த அந்தஸ்து இருக்கு.
Jeeva Subramaniam,
சொல்றப்பல விஜய், அஜீத் லாம் எல்லாருக்கும் தெரியுது. (லஞ்ச் அப்போ ஒரு லக்னோ காரர் இவங்க ரெண்டு பேரையும் பத்தி சொன்னதும் எனக்கு விக்கல் வந்துடுச்சு).
அண்ணாமலையான், Valaipoonga,
Thanks.
Sanjai,
இதுக்கெல்லாம் அசந்துடுவேன்னா நெனச்சீங்க?
ராஜி,
ReplyDeleteசஞ்சய் கேக்கறாரு இல்ல...பதில் சொல்லுங்க.
ஃப்ரீயா விடுங்க. இதெல்லாம் அரசியல்’ல சகஜம்.
ReplyDelete//சொல்றப்பல விஜய், அஜீத் லாம் எல்லாருக்கும் தெரியுது. (லஞ்ச் அப்போ ஒரு லக்னோ காரர் இவங்க ரெண்டு பேரையும் பத்தி சொன்னதும் எனக்கு விக்கல் வந்துடுச்சு).//
ReplyDeleteAppa nammalod kastam லக்னோ காரருக்கு kuda therinchirukku...
Hmm...
akka ungalukku than hindi theriume..
Pesama thinamum oru rendu kurala hindila mozhi peyarthu officela yellarukkum sollikudunga...
//Valaipoonga//
Sariya sonninga ponga...
1330 kuralaium manapadama sonna Leela palace la treat ungalodathunnu sollunga, paya pullaiga udane ore nalla yellathaum padichi thiruvalluvarukke vilakkam sonnalum sollu vanga...
priya ka...na sollanumnu nenachadhai manikandan sollittaar.. thanks manikandan:)
ReplyDeletematter ellam ok.. but titledhaan konjam uruthala irukku... nammala kurai solra madhiri irukku.. its ok...in my next comment......
Have a Happy,Healthy,Wealthy and Peaceful,Joyful,Colourful 2010 :)
ReplyDeleteKathir and others,
ReplyDeleteநக்கல் செய்வதல்ல இந்த பதிவின் நோக்கம்.
நமது மொழியின் மீதும், அதன் படைப்புகள்,படைப்பாளிகள் மீதும் உங்களுக்கு இருக்கும் மதிப்பும் பொறுப்பும் எனக்கும் நிறையவே இருக்கிறது.
நம்ம மாநிலத்தை தாண்டி சற்று வெளியில் வந்தால் தெளியும் இந்த மாதிரி உண்மைகள்.Its bitter though.
இதை பற்றி தெரியாமலோ, அல்லது தெரிந்துமோ, நம்ம ஊரு மக்கள் மொழியின் பெயரால் பேசற பேச்சுகள் தர்ற சலிப்பு தான் இந்த பதிவில் வெளிப்பட்டு இருக்க வேண்டும்.
Perhaps, it sounded sarcastic...
:-(
Dear Priya,
ReplyDeleteLike your Post. I can understand your feeling as iam in same wavelength- outside TamilNadu & when People here talk of Tamil & Tamil Culture I too feel Misarable. But you are brave ( in Explaining to them ) Keep it up. wishing you a Happy & Prosperous New Year !
S.Kannan.
( Gurgaon)