Monday 28 December 2009

Three Idiots (படம் இன்னும் பார்க்கலை)

ஒருத்தி ஒன்றுக்கு மூணு SuperHit படம் பாத்தா என்ன நடக்கும்? இதான்.

இந்த பதிவில் இருக்கும் கமெண்டை பார்த்த பிறகும்,  படம் பார்க்க வேண்டும் என்ற சபலம். தல, தளபதில்லாம் மசாலா வறுக்கும் போது வர்ற எரிச்சல் சூர்யா மேல வரலை. இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல கார்ல ஒட்ட வைச்ச bomb எடுத்து ஹெலிகாப்ட்டர்ல போயிட்டு இருக்க வில்லன் மேல எரிஞ்சுட்டு, அப்டியே தண்ணில குதிச்சு பொழைக்கறது எல்லாம், கேப்டன் கூட இப்போல்லாம் இந்த மாறி பண்ண மாட்டார். பொதுவா KSR படத்துல எல்லாம் அவர் ஒரு சீன்ல வந்து எதாச்சும் பண்ணுவார். படையப்பால 'கிக்கு ஏறுதே' பாட்டுல அழகா நாலு ஸ்டெப் போடுவார்.தெனாலில மீனாவை கூட்டிட்டு வருவார். இதுல புரடியூசரை அழைச்சுட்டு வந்து குழி பணியாரம் செய்ய சொல்லி தரார். எனக்கு தீபாவளி அன்னைக்கு வெறும் பணியாரம் சாப்பிட்டு வயிறு வலி வந்த மாறி இருந்துச்சு.

வயிறு வலியோட விட்டதா? ஜெயம் ரவி அப்படி என்னதான் பண்ணிருக்கார்ன்னு பாக்கலாம் ன்னு ராத்திரில ஒரு திடீர் முடிவு.
என்னென்னவோ பண்ணிருக்கார். எருமைமாட்டுக்கு பிரசவம் பாக்கறார். பொலிடிகல் எகனாமிக்ஸ் சொல்லி தரார். பாத்ரூம் கழுவறதுல கூட பாடம் இருக்குன்னு பீலிங்க்ஸ் விடறார். காட்டுக்குள்ள வெள்ளைக்காரன்களை (அட, படத்துல அவிங்களை அப்டி தான் சொல்றாங்க), பொசுக்கு பொசுக்குன்னு வீசி தள்ளுறார். கடசில ஏவுகணையை கூட திசை மாத்தி விடறப்போ, என் வயித்து வலியை தலைவலியா மாத்தி விட்டார். நல்ல வேளையாக,ஏவுகணையை பிடிச்சு தொங்கிட்டு போய்....அந்த மாதிரி முடிவு எல்லாம் அவர் எடுக்கலை.அந்த அஞ்சு பொண்ணுங்களும் ஆரம்பத்துல மொரண்டு பிடிக்குறதும், அப்றோம் சரி ஆறதும், இதெல்லாம் Chak De India விலேயே பாத்துட்டோம். ஆனாலும் கல்பனாவா வர்ற அந்த பொண்ணு ரொம்ப ஸ்மார்ட், சின்மயி குரலா?
Commodity<->Commodity
Commodity->Money->Commodity
Money->Commodity->Money
என்று கார்ல் மார்சை எளிமையாக சொல்லி தருவது பிடித்தது, எனக்கு கூகிள் பண்ண அடுத்த மேட்டர் ரெடி.

இதோட நிறுத்தி இருந்தா....சரி சரி விதி வலியது.
பதினஞ்சு வருஷமாச்சு எங்க ஊரில் நான் தியேட்டர் பக்கம் போய். எங்க ஊர் பொண்ணுங்க, பெரிய மனுஷி ஆனதும், "அதெல்லாம் ஆம்பிள்ளைங்க சமாச்சாரம்" என்று தியேட்டரை ஒதுக்கி வெச்சுடுவாங்க.பிறகு கல்யாணம் ஆனதும் கணவரோடு போக ஆரம்பிப்பாங்க. நான் கல்யாணம் ஆன பிறகும் போகலை. டெண்டுக்கொட்டகையை சற்றே upgrade செய்த நிலையில் இருக்கும் எங்க ஊரு தியேட்டருக்கு கணவரை அழைத்து போற அளவுக்கு தைர்யம் இல்லை என்பதாலும், பெரும்பாலும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முதலா போட்ட படங்கள் தான் எங்க ஊருல ரிலீஸ் ஆகிக்கொண்டு இருந்ததாலும் எனக்கு அங்க போகணும்ன்னு தோணினதே இல்லை. ஆனாலும் சமீப காலமா என் தம்பி ரொம்பவே பில்டப் கொடுத்தான். 'நம்ம ஊரு தியேட்டர் ரொம்ப முன்னேறிடுச்சு, புது படம் ரிலீஸ் அன்னைக்கு நம்ம ஊருலயும் ரிலீஸ் பண்றாங்க.DTS பண்ணிட்டாங்க" அப்டி இப்டின்னு ரொம்ப தாளிச்சுட்டு இருந்தான். சரி இந்த வாட்டி போய் பாத்துடறதுன்னு ஒரு முடிவெடுத்தாலும், "இந்த படமா? என்று சற்று உதறியது. "இந்த படத்துக்கு two wheelerல போனா, பெட்ரோல் allowance தராங்களாம்"  கிண்டலை எல்லாம் துச்சமென தள்ளிட்டு கிளம்பியே விட்டேன்.கூடவே ரஸ்க் சாப்பிட இன்னும் நாலு பேரை சேத்துக்கிட்டேன்.

Scooty park பண்ண போன எடத்துல எனக்கு மொத அதிர்ச்சி, பத்து ருபாய் ஒரு வண்டிக்கு. Fame லையே அவ்ளோ தான்.
உள்ள நுழைஞ்சதும் "வாங்க வாங்க"
ஓனர் சொந்த காரர். ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்த மாதிரி வாசல்ல நின்னு கூப்பிட்டார். கூப்பிட்டதோட விட்டாரா?
"நீ ஒல்லியா இருக்கப்போ பாத்ததும்மா" Grrrrr.
'டிக்கட் இருவது ரூபா இருக்கும், எக்ஸ்ட்ரா நூறு ரூபா இண்டர்வல்க்கு' என்று கணக்கு போட்டு வெறும் இருநூறு ரூபாயோட போய் இருந்தேன்.
"நூறு ரூபாய நீட்டி அஞ்சு first class டிக்கட் குடுங்க"ன்னதும்,டிக்கெட் குடுக்கறவர் டென்ஷன் ஆயிட்டார்.எனக்கு ரெண்டாவது அதிர்ச்சி.
எங்க ஊரு தியேட்டர்ல டிக்கெட் அம்பது ரூபாயாம். தம்பிகிட்ட அம்பது ரூபா கடன் வாங்கி,அஞ்சு டிக்கெட் எடுத்து உள்ள போனோம்.
தியேட்டர் சீட்டெல்லாம் கூட மாறலை. DTS மாத்திரம் புதுசு.
"நீ கடைசி கடசியா நாட்டாமை பாக்க வந்தப்போ இங்க தான்டி உக்காந்த" விட்டா என் தம்பி 'போன ஜென்மத்துல நீ...' ன்னு எல்லாம் சொல்வான் போலிருந்துச்சு.

இந்த படத்தை பத்தி ஏற்கனவே நெறைய பேரு FIR போட்டுட்டாங்க. படத்தை பத்தி எனக்கும் சொல்ல ஒன்னும் இல்லை. ஆனா படம் பாத்தப்போ நடந்த சில விஷயங்களை மாத்திரம் பகிர்ந்துக்கிறேன்.

-படம் ஆரம்பிச்சு கிட்ட தட்ட முக்கா மணி நேரம் கழித்து ஒரு நாலு பெண்கள் எங்களுக்கு முன் வரிசையில் வந்து உக்காந்தாங்க. வந்ததும் திரும்பி பின்னால் இருந்த எங்களிடம், "ஏங்க? அவர் பையன் ஆடுற பாட்டு போயிடுச்சா?" சாமீ....சத்தியமா நீங்க மாஸ் ஹீரோங்க.

-"உனக்கெல்லாம் போலீஸ் வேணாம். வேற வேற வேற...." ன்னு ஹீரோ பஞ்ச் சொல்றப்போ, முன் சீட்டு குழந்தை ஒன்று "பூச்சாண்டீ வந்துட்டான்" என்று அழுது ரகளை பண்ணிடுச்சு.

-இடைவேளைக்கு முன்னாடி ஒரு encounter சேசிங் காட்சி இருக்கும். பாதி சேசிங் போது என் கசின் சொன்னா, "பரவால்லக்கா, அட்லீஸ்ட் கிளைமாக்ஸ் கொஞ்சம் விறு விறுப்பா இருக்கு".

-காலைலேர்ந்தே நான் எங்கயோ கிளம்பறத மோப்பம் பிடிச்சு, "என்னை விட்டுட்டு எங்கம்மா போறீங்க?" ன்னு கேட்டுட்டே இருந்த அர்ஜுனை பிளான் பண்ணி வீட்டுல தூங்க வைச்சு விட்டுட்டு போன எனக்கு கடவுளா பாத்து பண்ண விஷயம். முன் சீட்டு பெண்மணி தன்னுடைய மூணு வயசு பையனை பாத்துக்கற பொறுப்பை என்கிட்டே விட்டுட்டு இன்டர்வல்ல சமோசா வாங்க போய்டுச்சு. அந்த பையனா, 'அப்பாடா பூச்சாண்டி போயிட்டான்'னு குஷில அங்க இங்க ஓடறது. அத அவங்கம்மா வர்ற வரைக்கும் சமாளிக்குறப்போ, "நல்லா வேணும்" ன்னு அர்ஜுன் ஞாபகத்துல வந்து சொல்லிட்டு போனான்.

-ஆமா இந்த படத்தை எல்லாரும் ஏன் இவ்வளோ திட்றீங்க? அம்பது ரூபாக்கு எவ்வளோ... பெரிய படம்? சான்சே இல்ல.படம் முடிஞ்சுடுச்ச்சுன்னு எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க. நல்ல வேளை, பார்க்கிங் கிளியர் ஆகட்டும் ன்னு வெயிட் பண்ணதால சல்யுட் அடிக்கறதெல்லாம் பாக்க முடிஞ்சுது. இல்லன்னா முக்யமான சீன மிஸ் ஆயிருக்கும்.

நல்லவேளை, நம்ம சீயான் "கொக்கொரக்கொ"ன்னு கத்தி கத்தி காமெடி பண்வாரே, அந்த படமும் பார்க்க வேண்டியது. ஏதோ நல்ல நேரம்.பிளான் கான்செல் ஆனது. அதையும் பாத்து இருந்தா, "Four mistakes of my life" அப்டின்னு போஸ்ட் போடறதுக்கு கூட பொழச்சு வந்து இருக்க மாட்டேன்னு நெனைக்கறேன்.

"ஏங்க வர வர சீரியஸ் பதிவு எழுதறீங்க? உங்க வழக்கமான போஸ்ட்லாம் எங்க?"
"ஹ்ம்ம்...எல்லாம் சில இலக்கியவாதிகளை பாத்து நானும் சூடு போட்டுக்கொள்ள முயற்சி செய்யறதோட விளைவு தான்"

ரொம்ப சூடு போட்டுக்கொண்டதால் எனக்கே சூடு தாங்க முடியாமல் இந்த பதிவு.

21 comments:

  1. //ஹ்ம்ம்...எல்லாம் சில இலக்கியவாதிகளை பாத்து நானும் சூடு போட்டுக்கொள்ள முயற்சி செய்யறதோட விளைவு தான்"//

    hmmmm :) :) :)

    ReplyDelete
  2. போயி 3 idots first பாருங்க ... அப்போ தான் இந்த மூணு படமும் எவ்ளோ மோசம்னு தெரியும்.. Its really wholesome entertainment movie in the line of Dil chahtha hai and Rang de basanthi

    ReplyDelete
  3. ரொம்ப சூடு போட்டுக்கொண்டதால் எனக்கே சூடு தாங்க முடியாமல் இந்த பதிவு. //////////

    hahahaha.. இதெல்லாம் தேவையா..?

    எப்படியோ படத்தையும் பார்த்துட்டு பதிவையும் போட்டாச்சு..


    இது சின்ன மீன் தான். அடுத்து வருது ... இனிமே உஷாரா இருங்க.

    ReplyDelete
  4. Vembankudi(West) (ama athai podalinna thittinaalum thittuveenga........) dooring talkies ellam irukka?? Appo neenga periya oorla irunthu thaan vanthreenkeenga.

    Sari enna padathai pathi pesittu irukeenga....Romba naal aatchu tamil padam paarthu, athu thaan.

    ReplyDelete
  5. //நல்லவேளை, நம்ம சீயான் "கொக்கொரக்கொ"ன்னு கத்தி கத்தி காமெடி பண்வாரே, அந்த படமும் இருந்துச்சு, ஸ்டார்ட் பண்ணேன். பிரிண்ட் சரி இல்ல. அதையும் பாத்து இருந்தா, "Four mistakes of my life" அப்டின்னு போஸ்ட் போடறதுக்கு கூட பொழச்சு வந்து இருக்க மாட்டேன்னு நெனைக்கறேன். //


    ithuku bathila thaan Kanden Kaathalai partheengale.. aana konjam munnadiye parthuteenga..

    ReplyDelete
  6. //Vembankudi(West) (ama athai podalinna thittinaalum thittuveenga........) dooring talkies ellam irukka?? Appo neenga periya oorla irunthu thaan vanthreenkeenga.//

    avanga oorla ithulam illa... naalu street ku ethuku scooty.. yosichu parka venama.. avanga pakathu ooruku poi parthuruppanaga...

    ReplyDelete
  7. Siyaan padam vera paarka mudivu pannenngala! Romba dhairiyaam thaan ungalukku.....Antha aandavana paarthu.....priyavin sevai intha blog ulakaththukku thevainnu.....keeral vizha vatchuttaar....

    ReplyDelete
  8. Jeeva Subramaniyam28 December 2009 at 04:46

    Hello sister,

    Englishsu padathula eruvathu vayasu heroinekku yella visayamum theriyuthunnu sonna namparinga aana Jayam Ravi pannina mattum otturinga...
    Intha mathiri pudhusa yethavathu try panna aalunga irukkangalennu konjam parattunga...
    Appuram Jayam Ravi mathiri aalunga iruppathu impossible nnu nenaigathinga yen friend oruthan irukkan, Avanum intha mathiri than yella visayamum update panni vachiruppan oru visayam thavira Ponnu gala pathi ketta-Antha kodumai yenakkethukkunu sollu ra aalu(Oru vela athanala than brilliant ah irukkano yennavo)...
    Namma nattula than thiramai iruntha avana mathikka mattome...
    Appuram Kadachiya oru periyavar Aduththa Makkal Nayagan(Mukkiyamaga oor arasuvin padangalil avarin dressai parkavum) yendru yengalal anpudan alaikka padum avarai patriya pathivukalai namathu valai ulaga nanpargal kuraithu kolvathu nallathu...
    Indirect ah nengale avarukku vilamparam seiyeringalo...
    Anuthapa ottunu solluvangale athu mathiri yethavathu vangara yennamo...

    ReplyDelete
  9. உங்கள மாதிரி ஆளுங்க இருக்கற வரைக்கும் இந்த மாதிரி (பப்)படம்லாம் தொடர்ந்து வந்து ஹிட் ஆகும்.. கவலையே படாதீங்க..... ஹி ஹி

    ReplyDelete
  10. //"ஹ்ம்ம்...எல்லாம் சில இலக்கியவாதிகளை பாத்து நானும் சூடு போட்டுக்கொள்ள முயற்சி செய்யறதோட விளைவு தான்"
    //

    இதோட நிறுத்திடுங்க சாமி. சில புகைபட வல்லுநர்களைப் பார்த்து போட்டோ எடுக்கிறேன் பேர்வழின்னு கிளம்பிடாதிங்க..

    ReplyDelete
  11. //அந்த மாதிரி முடிவு எல்லாம் அவர் எடுக்கலை.அந்த அஞ்சு பொண்ணுங்களும் ஆரம்பத்துல மொரண்டு பிடிக்குறதும், அப்றோம் சரி ஆறதும், இதெல்லாம் Chak De India விலேயே பாத்துட்டோம்.//

    சக் தேவை இதை விட மோசமா அவமானப் படுத்த முடியாது. நல்லா இருங்க தாயீ. திருட்டு விசிடில பார்த்ததுக்கே இப்படின்னா, காசு குடுத்துப் பார்த்திருந்தா கெட்ட வார்த்தைல திட்டுவீங்களா? :)

    ReplyDelete
  12. //"அதெல்லாம் ஆம்பிள்ளைங்க சமாச்சாரம்" என்று தியேட்டரை ஒதுக்கி வெச்சுடுவாங்க.//

    தியேட்டரை இல்ல.. உங்கள ஒதுக்கிடுவாங்கன்னு சொல்லுங்க..

    //பிறகு கல்யாணம் ஆனதும் கணவரோடு போக ஆரம்பிப்பாங்க. நான் கல்யாணம் ஆன பிறகும் போகலை.//

    எல்லாம் கதிரி செஞ்ச புண்ணியம் தான். :)

    //நம்ம ஊரு தியேட்டர் ரொம்ப முன்னேறிடுச்சு, //

    கைல எழுதிக் குடுக்கிறதுக்கு பதில் ப்ரிண்ட் பண்ண டிக்கெட் தராங்களா இல்லை முன்ன மாதிரி சுவர் ஏறி குதிக்க முடியாம பண்ணிட்டாங்களா?

    ReplyDelete
  13. //இந்த படமா? என்று சற்று உதறியது. "இந்த படத்துக்கு two wheelerல போனா, பெட்ரோல் allowance தராங்களாம்" //

    கார்ல போனா ஒரு EMI கட்டுவாங்களா?

    //நீ ஒல்லியா இருக்கப்போ பாத்ததும்மா//
    பயபுள்ள எப்டி கத விட்டிருக்கான் பாருங்க? இவங்க ஒல்லியாக் கூட இருந்தாங்களாம்.. ஹய்யோ.. ஹய்யோ..

    //போன ஜென்மத்துல நீ...' ன்னு எல்லாம் சொல்வான் போலிருந்துச்சு.//

    ச்ச.. ஜஸ்ட் மிஸ்ட்.. போன ஜென்மத்துல நீங்க என்னவா இருந்திங்கன்னு தெர்ஞ்சிக்க முடியாம போச்சே..

    //டிக்கட் இருவது ரூபா இருக்கும், எக்ஸ்ட்ரா நூறு ரூபா இண்டர்வல்க்கு' //

    இண்டர்வல்க்கு 200 ரூபாய் செலவு பண்றவங்க ஒல்லியா கூட இருந்தாங்களாம்.. அவன் தான் புருடா விட்டிருக்கான்னா, இவங்களும் மனசாட்சியே இல்லாம அதை கேட்டிருந்திருக்காங்க..

    ReplyDelete
  14. //உள்ள நுழைஞ்சதும் "வாங்க வாங்க"
    ஓனர் சொந்த காரர். ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்த மாதிரி வாசல்ல நின்னு கூப்பிட்டார்.//

    பின்ன, அந்த ஊர்ல சுவர் ஏறி குதிக்காம காசு குடுத்து படம் பார்க்க மொத மொத ஒரு கும்பல் வந்தா வேற எப்டி கூப்டுவாராம்.

    ReplyDelete
  15. //avanga oorla ithulam illa... naalu street ku ethuku scooty.. yosichu parka venama.. avanga pakathu ooruku poi parthuruppanaga..//

    என்ன கொடுமை ப்ரியா இது? ராஜி எல்லாம் இவ்ளோ புத்திசாலியா நக்கல் அடிக்கிறாங்களே.. :))

    ReplyDelete
  16. சத்தியமா நீங்க மாஸ் ஹீரோங்க.//

    சில உண்மைகள் சிலருக்கு லேட்டாகத் தான் புரியும். உங்களுக்கும் சீக்கிரம் புரிந்துவிட்டது.


    By,
    அகில உலக இளையதளபதி அரசியல் ச்சே ரசிகர் மன்றம்

    ReplyDelete
  17. சஞ்சய் காந்தி
    ரொம்ப நாளாச்சே, இன்னும் பிரியா கடனை திருப்பி கொடுக்கலியா?

    ReplyDelete
  18. அது குடுத்து முடியாது சுரேஷ்.. அவங்க எனக்கு வாழ்நாள் பூராவும் கடன்பட்டிருக்காங்களாம்.. :))

    ReplyDelete
  19. Sonnalum Solattiyum vijay Maas hero thaan.

    My niece who is just 2yrs old is die hard fan of Vijay. Avan Screen la vantha flying kiss kodukara. Kuruvi padathai even vijay would not have seen that much but this girl has seen it atleast 100 times. I am not exagerrating. Ithanaiku ava appa ammaku Vijay padamey pidikathu. Ever since she saw gilli she loves his movies.


    Infact my kids my neighbors kids all love to watch his movie.

    ReplyDelete
  20. -படம் ஆரம்பிச்சு கிட்ட தட்ட முக்கா மணி நேரம் கழித்து ஒரு நாலு பெண்கள் எங்களுக்கு முன் வரிசையில் வந்து உக்காந்தாங்க. வந்ததும் திரும்பி பின்னால் இருந்த எங்களிடம், "ஏங்க? அவர் பையன் ஆடுற பாட்டு போயிடுச்சா?" சாமீ....சத்தியமா நீங்க மாஸ் ஹீரோங்க.

    -"உனக்கெல்லாம் போலீஸ் வேணாம். வேற வேற வேற...." ன்னு ஹீரோ பஞ்ச் சொல்றப்போ, முன் சீட்டு குழந்தை ஒன்று "பூச்சாண்டீ வந்துட்டான்" என்று அழுது ரகளை பண்ணிடுச்சு.

    -இடைவேளைக்கு முன்னாடி ஒரு encounter சேசிங் காட்சி இருக்கும். பாதி சேசிங் போது என் கசின் சொன்னா, "பரவால்லக்கா, அட்லீஸ்ட் கிளைமாக்ஸ் கொஞ்சம் விறு விறுப்பா இருக்கு".--//

    ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க.. உங்க வலைபக்கம் வருகின்றது இதுதான் முதல் முறை என்றாலும்.. அந்த தியேட்டர் அனுபவங்களை எழுதிய போது...உங்கள் எழுத்தை ரசிக்க தொடங்கி இருக்கின்றேன்...

    அன்புடன்
    ஜாக்கிசேகர்

    ReplyDelete
  21. ஓனர் சொந்த காரர். ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்த மாதிரி வாசல்ல நின்னு கூப்பிட்டார். கூப்பிட்டதோட விட்டாரா?
    "நீ ஒல்லியா இருக்கப்போ பாத்ததும்மா" Grrrrr.--//

    இந்த வரியோட பன்ச்... அந்த கீர்ர்ர்ர்தான்... சிரிச்சி வயிறு வலிக்குது...

    ReplyDelete